தஞ்சாவூர் மாவட்டத்தில், உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற தினமான மே தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கடைவீதியில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆம்பல் துரை.ஏசுராஜா, ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், நீலமோகன், ஜகுபர்அலி, குமாரசாமி, ராமலிங்கம், உலகநாதன், மாணிக்கம், கோவிந்தராசு, சண்முகம், ஜாக்குலின் மேரி, கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கொன்றைக்காடு, ஆதனூர், பின்னவாசல், வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 16 இடங்களில் கொடியேற்றப்பட்டது.