ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் : தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

IT TEAM
0

 


தஞ்சாவூர், ஏப்.28 -  தமிழகம் முழுவதும் குறிப்பாக, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னையை பாதிக்கும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இயற்கை உரம் மற்றும் நுண்ணூட்டங்களை முழு மானியத்துடன் வழங்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் எழுத்துப்பூர்வமான பாலிசியுடன், பயிர்க் காப்பீடு வழங்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்திற்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கி அனைவருக்கும் வழங்க வேண்டும்.  தஞ்சை மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை உருவாக்கிட வேண்டும்.  தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். பேராவூரணியில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம், தஞ்சை மாவட்டக் குழு சார்பில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை காலை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.செல்வம், முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி.கண்ணன், மாவட்டப் பொருளாளர் அரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.   மாவட்ட நிர்வாகிகள் என்.சுரேஷ்குமார், எஸ்.கமால் பாட்சா, ஏ.நவீன் ஆனந்த், ஜி.பிரபாகர், வி.ஆர்.கே.செந்தில்குமார், ஏ.எம்.வேதாச்சலம், வே.ரெங்கசாமி, ஜாக்குலின் மேரி, கோவிந்தராஜ், மாணிக்கம், கோரா, ருக்கூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top