அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், சட்டப்பேரவையில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூபாய் 5 கோடி பேராவூரணி அரசு மருத்துவமனை வளர்ச்சிக்காக ஒதுக்கினார். இந்நிலையில், தற்போது ரூபாய் 4 கோடியில், 3 தளங்களுடன் கூடிய கட்டடப் பணியும், ஒரு கோடி ரூபாயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் புதிய கட்டடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் நடைபெற்று வரும் வேலைகள் குறித்து விளக்கினர்.
பேராவூரணி அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ... துப்புரவு பணியாளர்கள் தேவை என மருத்துவர்கள் கோரிக்கை
ஜூன் 27, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க