பேராவூரணியில் மாரத்தான் போட்டி - மாற்றுத்திறனாளிகளும் வீல்சேரில் பங்கேற்று அசத்தல்

IT TEAM
0

 


பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, உடற்பயிற்சி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வை இலக்காக வைத்து,பேராவூரணி மாரத்தான் எனும் தலைப்பில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்வுக்கு, அகாடமி தலைவர் மருத.உதயகுமார் தலைமை வகித்தார். மாரத்தான் விழாவை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட அமைச்சூர் கபடி கழகத் துணைத் தலைவர் தென்னங்குடி ராஜா, கைஃபா தலைவர் கார்த்திகேயன் வேல்சாமி, மருத்துவர் துரை.நீலகண்டன், நல்லாசிரியர் மனோகரன், வர்த்தக சங்கத் தலைவர் அபிராமி சுப்பிரமணியன், லயன்ஸ் சங்க தலைவர் கேகேடி.சுப்பிரமணியன், கோக்கனட் சிட்டி சங்கத் தலைவர் ஜிவி.ராஜ்குமார், ஸ்டார் லைன்ஸ் சங்கத் தலைவர் ஆதித்யன், வட்டாரத் தலைவர் ஆசிரியர் ராமநாதன், கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார், சோகோ கார்ப்பரேஷன் சசிகுமார், கல்வியாளர் கௌதமன், நல்லாசிரியர் காஜா முகைதீன், வை.சிதம்பரம், இயற்கை ஆர்வலர் நிமல் ராகவன், அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, அஇஅதிமுக நகர செயலாளர் எம்எஸ்.நீலகண்டன், நகர வர்த்தகர் கழக செயலாளர் மணிகண்டன், கைஃபா நிறுவனர் நவீன் ஆனந்தன், வர்த்தக கழக முன்னாள் தலைவர் ஆர்பி.ராஜேந்திரன், என்.பாலமுருகன், சித.திருவேங்கடம், சோழநாடு விளையாட்டு அறக்கட்டளை இயக்குனர் எஸ்.நீலகண்டன், சமூக ஆர்வலர் ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி, சர்வேயர் ஜான் கென்னடி, செந்தில் ஹார்டுவேர்ஸ நீலகண்டன், தாமரைச்செல்வன், மெய்ச்சுடர் வெங்கடேசன், பழனிவேலு, ஆசிரியர் சிவக்குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள் பொது பிரிவு, பெண்கள் பொது பிரிவு, 14 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர், 14 வயதுக்குட்பட்டோர் சிறுமியர் என போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் தமது மாரத்தான் திறனை காட்டும் வகையில் வீல் சேர் மாரத்தான் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 22 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டிகளில் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் சோலை தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர் குழுவினர் போட்டிகளை நடத்தினர். முன்னதாக, அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி வரவேற்புறையாற்ற, நிறைவாக, அகாடமி பெற்றோர் சங்க தலைவர் நித்யா நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top