சுதந்திர தினத்தை முன்னிட்டு பேராவூரணி தாலுகா குப்பத்தேவன் வலசை ஊராட்சி ஆலடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லையன்ஸ் சங்கத்தின் சார்பில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சங்கத்தின் செயலாளர் G.பிரதீஸ் அவர்கள் தலைமையில் வட்டார தலைவர் நா.ப. ரமேஷ் அவர்கள் முன்னிலையில் பொருளாளர் S.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர கொடியினை ஏற்றி தலைவர் G.V.ராஜ்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் சாசனத்தலைவர் M. நீலகண்டன் மாவட்ட தலைவர்கள் S. பாண்டியராஜன் K.இளங்கோ நிர்வாக அலுவலர் ராஜசேகரன், தகவல் செய்தி தொடர்பாளர் சுப.பெரியசாமி சங்க உறுப்பினர்கள்
P.பன்னீர்செல்வம் A.சபரி முத்துக்குமார், T. மணிகண்டன் A.V.ரவி, K.சிவலிங்கம் A.சிவசங்கர் G.செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் ,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சங்கத்தின் சார்பில் கால் சூ வழங்கப்பட்டது.இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக தலைமையாசிரியர் அ.ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.
