பேராவூரணி, அக் 13
பேராவூரணியில், லயன்ஸ் கிளப், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து, விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன், காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். செயலாளர் மனோகரன் வரவேற்றார்.
விழிப்புணர்வு பேரணி பேராவூரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி, மெயின் ரோடு, சேதுபாவாசத்திரம் ரோடு வழியாக தாசில்தார் அலுவலகம் வரை நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், போலீசார்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.