பேராவூரணி- விஎம்டி தர்மம் பவுண்டேஷன் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது. தமிழக முழுவதும் அன்னதான சேவையும், குருதிக்கொடை மூலம் உயிர் காக்கும் சேவையும், கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி சேவையும் செய்து வரும் விஎம்டி தர்மம் பவுண்டேஷன், பேராவூரணியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவங்கியுள்ளது. நிகழ்வில், விஎம்டி பவுண்டேஷன் நிறுவனர் அருண் சேரன் அனைவரையும் வரவேற்றார். துவக்க நிகழ்வாக, தெய்வத்திரு வி.என்.பக்கிரிசாமி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவிற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராசு, திமுக மாவட்ட அவை தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், கைஃபா தலைவர் கார்த்திகேயன் வேல்சாமி, பண்ண வயல் இளங்கோ, பேராவூரணி திலீபன், அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, நகரச் செயலாளர் எம்எஸ்.நீலகண்டன், லயன்ஸ் சங்கத் தலைவர்கள் கேகேடி.சுப்பிரமணியன், ஜிவி.ராஜ்குமார், வர்த்தக சங்க தலைவர் அபிராமி சுப்பிரமணியன், செயலாளர் மணிகண்டன், ஆர்பி.ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சிவ.சதீஷ்குமார், ஏசியன் முகமது முஸ்கிர், கள்ளம்பட்டி செல்வம், மனோ நீலகண்டன், வ.தனபால், மருத்துவர்கள் காந்தி, தனபால், பத்திரிக்கையாளர்கள் கான் முகமது, ஜகுபர் அலி, ராஜா, திருஞானம், நீலகண்டன், முனைவர் வேத கரம்சந்த் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விஎம்டி பவுண்டேஷன் குடும்பத்தார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேராவூரணி பகுதியில் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவைக்கு காரணமான விஎம்டி பவுண்டேஷன் நிறுவனர் அருண்சேரனை அனைவரும் வெகுவாக வாழ்த்தினார்.