பேராவூரணி தெய்வத்திரு விஎன்.பக்கிரிசாமி அவர்களின் நினைவாக தமிழகம் முழுவதும் தொடர் அன்னதானத் திட்டத்தை பல நூறு நாட்களாக வெற்றிகரமாக நடத்தி வரும், விஎம்டி தர்மம் பவுண்டேஷன் நிறுவனர் விஎன்பி.அருண் சேரன் அவர்களின் சீரிய முயற்சியில், வரும் வெள்ளிக்கிழமை 10-10-2025 மாலை 4 மணிக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்ட துவக்க விழா நடைபெறுகிறது. பேராவூரணி பகுதி மருத்துவமனைகளுக்கு இந்த சேவை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள 88 700 90 666 என்ற எண்ணை பயன்படுத்தி மக்கள் பயன் பெறலாம். விழாவுக்கான ஏற்பாடுகளை, விஎம்டி தர்மம் பவுண்டேஷன் நிறுவனர் விஎன்பி.அருண் சேரன் செய்து வருகிறார். அவரது சேவையை பேராவூரணி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.