பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், வீரியங்கோட்டை ராஜராஜன் கல்வி நிறுவனம் மற்றும் கோமதி பல் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பல் மருத்துவ சிகிச்சை முகாம், ராஜராஜன் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் வரவேற்றார். சங்கத்தின் தலைவர் ஜீ.வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ஜி.பிரதீஸ், வட்டாரத் தலைவர் நா.ப.ரமேஷ், மாவட்டத் தலைவர் எஸ். பாண்டியராஜன் ஆகியோர் நிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். நிகழ்வில், பி.பழனிவேல் பொறியாளர் க.இளங்கோ, வி.பாலசுப்பிரமணியன், ஜெய்சங்கர், ஜி.சங்கர் ஜவான், எஸ்.ரவி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோமதி நவீன பல் மருத்துவமனை உரிமையாளர் ஜி.விஜய் மோகன் உட்பட 5 மருத்துவர்கள் மற்றும் 6 செவிலியர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினார்கள். முகாமில், சுமார் 850 நபர்கள் பயனடைந்தனர். முகாமில், வெங்கடேஸ்வரன், எஸ்.சுஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில், பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.