தஞ்சாவூர், டிச.9 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி கிராமத்தில், பேராவூரணி பட்டுக்கோட்டை முதன்மைச் சாலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று
ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை,
தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் முன்னிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன்,
கலியபெருமாள், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், மத்திய ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, நிர்வாகிகள் க.சி.திருப்பதி, பழ.ராசேந்திரன், தீபலட்சுமி, பி.ராமசாமி, த.தியாகராஜன், கே.சாமிநாதன், செல்வராஜ், ராஜகோபால், கனக.ராமச்சந்திரன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
