தஞ்சாவூர், டிச.8 -
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.3 கோடி மதிப்பீட்டிலான, முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் சிறு விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினர். அதனைத் தொடர்ந்து பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி, அடிக்கல் நாட்டி, பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
டி.பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர்,
ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், கோ.இளங்கோவன், ஆர்.பன்னீர்செல்வம், வை.ரவிச்சந்திரன், செ.ஞானப்பிரகாசம், குழ.செ.அருள் நம்பி, நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், ஆர்.மாரிமுத்து, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் எம்.சி.குமரேசன், உதவி செயற்பொறியாளர் ஆர்.ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் சி.மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன் (பேராவூரணி), எஸ்.நாகேந்திரன், ஆர்.மனோகரன் (சேதுபாவாசத்திரம்) பொறியாளர்கள் ஆர்.ஜி.சுரேஷ், ஆரோக்கியராஜ், கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் நன்றி கூறினார்.
