தஞ்சாவூர், டிச.22 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பள்ளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 வகுப்பறை கட்டடத்தை திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலர் இ.மாதவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், எஸ்.ஞானப்பிரகாசம், குழ.செ.அருள்நம்பி, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் இரா.இராசரெத்தினம், பொதுக்குழு உறுப்பினர் அ.தனபால், அரு.நல்லதம்பி, கூத்தலிங்கம், சாமிக்கண்ணு, பாலகிருஷ்ணன், கிராமத்தினர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
