பேராவூரணி ஒன்றியம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான (0 - 18 வயது) மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான (0 - 18 வயது) மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. பேராவூரணி மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், முகாமில் மருத்துவர்கள் , நவீன், கலைகண்ணன், அறிவழகன், மங்கையர்க்கரசி, ஆகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் புதிதாக மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டது, UDID அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் ஷாஜிதபானு, நன்றி உரை கூறினார். முகாமில் இயன் முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் மகாதேவி , சத்தியா ஆகியோர் செய்திருந்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு, தேநீர், சிற்றுண்டி, பயணப்படி வழங்கப்பட்டது.
