கிறிஸ்துமஸ் தின விழாவை கொண்டாடும் வகையில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஊமத்தநாடு கிராமத்தில் வசிக்கும் ஐந்து ஏழை கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 கிலோ அரிசி மூடை ,காய்கறிகள் ,இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ஜி.வி.ராஜ்குமார், செயலாளர்
ஜி. பிரதீஸ், சங்க பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், சங்க சாசனத் தலைவர் எம்.நீலகண்டன் மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர் வ.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
