மழைநீர் வடிகாலில் செப்டிக் டேங்க் கழிவு கொட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - சமூக ஆர்வலர் நவீன் ஆனந்தன் கோரிக்கை

IT TEAM
0

 


 பேராவூரணி பிள்ளையார் கோவில் பின்புறம், மழைநீர் வடிகால் வாய்க்காலில் செப்டிக் டேங்க் கழிவு நீர் பல நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது. இது அந்த பகுதி மக்களிடையே பெரிய எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நவீன் ஆனந்தன் அவர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், 

திட்ட இயக்குநர், கிராமப்புற மேம்பாடு, மாநில திட்டக் குழு, தலைமைச் செயலகம்,

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  

ஆகியோரின் கவனத்திற்கு கோரிக்கையை எடுத்துச் சென்றுள்ளார். அந்தக் கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது "பிள்ளையார்கோவில் பின்புறம் செல்லும் மழை நீர் வடிகாலில், செப்டிக் டேங்க் கழிவு நீர் பல மாதங்களாக நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது. இதை அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இதனால் பாதிக்க படுவது நீர்நிலைகள் ,நிலத்தடி, நீர், கால்நடைகள் , பல பறவை இனங்கள் பல்லுயிர்கள் தான். சுத்திகரிக்கப்படாத அல்லது முறையாகச் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் உள்ள கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் சுற்றுச்சூழலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பு மலக் கலங்கலையும், சால்மோனெல்லா, ஷிகெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிக்கிறது. 1000 கணக்கான குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள், இதன் மூலம் டெங்கு, காலரா காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளவர்கள். நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் மாசுபடும். இதன் மூலம் பேராவூரணி, பெருமகளூர் கிராமங்கள், கழனிவாசல், ஆதனுர் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே செப்டிக் டேங்க் கழிவுநீர் இந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் கொட்டப்படுவதை தடுத்தும், அடுத்த 3-6 மாதத்தில் பேராவூரணி ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top