தஞ்சாவூர், ஜன.13 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உலகம் உங்கள் கையில்" என்ற 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகின்றனா். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில், கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா.அசோக்குமார் (பேராவூரணி) ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், ராஜாமடம் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் என்.எம்.ஹெச்.அல்ஹாஜி, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ராணி, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், திமுக அயலக அணி தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்த் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் அருகே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
ஜனவரி 14, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
