தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சாவூர் மாவட்ட கிளையின் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி-பட்டுக்கோட்டை)) வ.மதியழகன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி- தஞ்சாவூர்) அய்யாக்கண்ணு ஆகியோர் மற்றும் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து, இயக்க நாட்காட்டி வழங்கினர். நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆர்.சரவணன், மாவட்டச் செயலாளர் செ.ராகவன்துரை மாநில செயற்குழு உறுப்பினர் ச.துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.சகிலா மற்றும் பட்டுக்கோட்டை ரா.குமார், பி.செல்வம்,
சு.தர்மராஜன், அ.பிரகாஷ், பன்னீர் ஆகியோரும், மதுக்கூர் ஆ.வினோத், பா.ராஜேந்திரன், து.டேனியல், இரா.வீரமுத்து, மு.செல்வநாயகம் ஆகியோரும், சேதுபாவாசத்திரம் அ.வீ.சந்திரசேகரன், பரமசிவம் ஆகியோரும், பேராவூரணி சி.லெட்சுமணசாமி, கு.பாலச்சந்தர், க.நீலகண்டன், கு.கிருஷ்ணமூர்த்தி
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
