மின் கசிவால் தீயில் வீடு எரிந்த குடும்பத்தினரை அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சந்தித்து நிதியுதவி -
ருத்ரசிந்தாமணி ஊராட்சி பளுக்காடு ஓரியாக்கொள்ளை பகுதியில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் அத்தனையும் சேதம் அடைந்து வீடும் தீக்கிரையான நிலையில், தகவல் அறிந்த அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் எஸ்.நீலகண்டன், ருத்ரசிந்தாமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் பழுக்காடு முத்துதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியதோடு அதிகாரிகளிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
