பேராவூரணி வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்குரிய இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமை மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். இப்பயிற்சியில் தொடக்க நிலை மாணவர்களிடம் கற்றல் அடைவை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு கருத்தாளராக ஆசிரியர்கள் ரஞ்சித்,மார்சலின், இளையராஜா, மகேஷ்வரன் ஆகியோர் செயல்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதாபானு பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
பேராவூரணி வட்டாரத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி
ஜனவரி 29, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
