பேராவூரணியில் நடைபெற்று வரும் ஐயப்பா ஆலய திருப்பணியின் ஒரு பகுதியாக, 18 படிகளுடன் கூடிய ஐயப்பன் ஆலய முதல் பில்லர் நிறுத்தும்பணி துவங்கியது. நிகழ்வில், சபரிமலை முன்னாள் மேல் சாந்தி பத்மஸ்ரீ ஜெயராமன் நம்பூதிரி அவர்களால் பூஜை செய்யப்பட்டு, 18 படிகளுடன் கூடிய ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் முதல் பில்லர் நிறுத்தும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில், ஐயப்ப பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகியும், சபரிமலை ஐயப்ப சேவ சமாஜ மாநில பொதுச் செயலாளருமான கமலா கேஆர்வி.நீலகண்டன் செய்திருந்தார்.
