பேராவூரணி சேது சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் பராமரிப்பு பணி காரணமாக வரும் திங்கள்கிழமை மூடல்
ரயில்வே துறையின் செக்சன் சீனியர் இன்ஜினியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பேராவூரணி சேது சாலையில், பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ரயில்வே லெவல் கிராசிங்(LC NO: 118) பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 16-2-2026 திங்கள்கிழமை அன்று காலை எட்டு மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள், அதற்கு மாற்றாக பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் ஆலயம் எதிரில் உள்ள நாட்டானிக்கோட்டை (LC NO: 120) லெவல் கிராசிங்கை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
