புனித வெள்ளி நாளில் ஜெபம் முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களுக்கு ஸ்னாக்ஸ் மற்றும் மோர் வழங்கிய பேரை துளிர் அறக்கட்டளை நண்பர்கள் பேரை துளிர் அறக்கட்டளை நண்பர்கள் சார்பில், ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில் ஜெபம் முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களுக்கு, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை, கேக் மற்றும் பப்ஸ், மோர் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நிகழ்வில், அறக்கட்டளை தலைவர் விஆர்ஜி.நீலகண்டன், செயலாளர் மகாராஜா, பொருளாளர் ம.செந்தில் குமார் மற்றும் உறுப்பினர்கள் தாமரைச்செல்வன், ரபீக், முனைவர் வேத கரம்சந்த் காந்தி, அருண்குமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த நிகழ்வை நடத்தி வரும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையை, கிராம மக்கள் பாராட்டி நன்றி கூறினர்.
