பேராவூரணி, ஏப் 10- பேராவூரணியில் நகர வர்த்தக கழக உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. வர்த்தக கழக தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்ரஹ்மான் வரவேற்றார். கூட்டத்தில், வரும் சித்ரா பவுர்ணமி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் 7ம் திருவிழாவில் கச்சேரி அமைத்தல், வசூல் செய்ய குழு அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் 2025-26ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தனர். இதில் கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
