நாட்டாணிக் கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் கா.முகமது அப்ராஸ் , சென்னையில் இயங்கி வரும் SIP அபாகஸ் பயிற்றகத்தில், இணைய வழியில் பயின்று , தற்போது அபாகஸில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.. சாதனை புரிந்த மாணவருக்கு பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் கலாராணி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.. நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, பட்டதாரி ஆசிரியர் திருஞானம், சிறப்பு ஆசிரியர் முருகேசன், தற்காலிக ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
