பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி மகிழினி "ஆத்திச்சூடி ஐந்து நிமிட சவால்" போட்டியில் கலந்து கொண்டு 1 நிமிடம் 55 வினாடிகளில் ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியின் 109 செய்யுள்களையும் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். ஜாக்கி உலக சாதனை புத்தகம் நடத்திய "ஆத்திச்சூடி 5 நிமிட சவால்" போட்டியில் சாதனை புரிந்த மாணவி மகிழினிக்கு பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் கலாராணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் வீர. சந்திரசேகரன், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் சாஜிதா பானு, ஆசிரியர் காஜாமுகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
