

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலைகட்டிய மாமன்னர் இராசராச சோழனின் சதய திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது போல் இந்த ஆண்டும் மாமன்னர் இராசராசசோழனின் 1032 ஆம் ஆண்டு சதய திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 30 திங்கட்கிழமையன்று தஞ்சாவூர்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்தும், அதற்கு பதிலாக நவம்பர் 25 சனிக்கிழமையன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.