30 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் சர்க்கரை நோய் பரிசோதனை அவசியம்.

Unknown
0


பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி நவம்பர் 14 செவ்வாய்க்கிழமையன்று கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு தலைமை மருத்துவர் டாக்டர் ஜஸ்டின் பிரசாந்த் தலைமை வகித்தார். டாக்டர்கள் செல்வி, பிரசன்னா முன்னிலை வகித்தனர். தேசிய சுகாதாரக் குழுமத்தின் தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலரும், சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு நிபுணருமான டாக்டர் எம்.எட்வின் பேசுகையில், “ 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் தவறாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி சர்க்கரை நோய், இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.தரமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

எனவே அலட்சியம் காட்டாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு, பாதங்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நோயாளிகள் தங்களை பாதுகாத்திட இயலும். உடற் பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனையின்படி மாத்திரை, இன்சுலின் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்து இயல்பாக வாழலாம் என்றார். மருத்துவ பரிசோதனை செய்து, தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top