கொத்தமங்கலத்தில் விவசாய ஆழ்குழாய் கிணற்றில் எண்ணெய் கலந்த தண்ணீர் வந்ததால் பரபரப்பு.
நவம்பர் 27, 2017
0
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40) விவசாயியான இவர், அப்பகுதி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனது வயலில் பாசனத்திற்காக சுமார் 300 அடி ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின் மோட்டார் வைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறார். தற்போது வயலில் கடலை பயரிட்டுள்ளார். இப்பகுதிகளில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மும்முனை மின்சாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் கிடைக்கும். இந்நிலையில் நேற்று மாலை வயலில் கடலைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியபோது, ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எண்ணெய் கலந்த தண்ணீர் வந்துள்ளது. அந்த தண்ணீரில் கை வைத்தால் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் தண்ணீரை பாய்ச்சாமல் விட்டுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு அப் பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க