பேராவூரணி அருகே கிணற்றில் கிடந்த சடலம் மீட்பு.

Unknown
0
பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் தலைகுப்புற ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரிகள் உதவியோடு மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிணற்றில் சடலமாக மிதந்தவர், அருகில் உள்ள மாவடுகுறிச்சி பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் ராஜேந்திரன் (வயது 36) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top