டெல்லியில் அமைக்கப்படும் அமிர்த தோட்டத்திற்கு மண் சேகரித்து வழங்கல்.
பேராவூரணி, அக் 18
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது மண், எனது தேசம் டெல்லியில் அமைக்கப்படும் அமிர்த தோட்டத்திற்கு மண் சேகரித்து வழங்கல்.
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில் எனது மண், எனது தேசம் இயக்கம் துவங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த இயக்கத்தின் கீழ் அமுத கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7 ஆயிரத்து 500 சிறிய அளவிலான பானைகளில் மண் சேகரிக்கப்பட்டு, அந்தப் பானைகளில் உள்ள மண் அனைத்தும், டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும். இது ஒரே இந்தியா, தலைசிறந்த இந்தியா என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில், இந்த பூங்காவனம் அமைக்கப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களால் மண் சேகரிக்கப்பட்டு நேரு யுக கேந்திரா அமைப்பின் தஞ்சை மாவட்ட இயக்குநர் நீலகண்டனிடம் கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி வழங்கினார். இதில் பேராசிரியர்கள் ராஜ்மோகன், ஜெயக்குமார், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்