பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து முகாமிற்கு தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் அங்கற்கண்ணி, கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரிய பயிற்றுநர் சரவணன் முகாமை ஒருங்கிணைத்தனர்..
முகாமில், மாவட்ட திட்ட அலுவலக அலுவலர் திருமேனி சாந்த ஷீலா, வட்டார சிறப்பு ஆசிரியர்கள் மகாதேவி, சத்யா ஆகியோர், மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி பெறுவதற்கு உதவி செய்தனர்.
முகாமில் காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, கண், மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதனடிப்படையில், மாற்றுத்திறன் மாணவர்கள் 11 பேருக்கு அடையாள அட்டை, 22 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள்
தேவையான உதவிகளை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
முகாமில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி எல்.ஏ.முகமது மைதீன் நினைவாக எல்.ஏ.எம் அறக்கட்டளை சார்பில், அனைவருக்கும் தேநீர், பிஸ்கட், மதிய உணவு வழங்கப்பட்டது.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்