அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்டோர் பெண்கள் கபடி போட்டியில் தமிழகப் பெண்கள் கபடி அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதில், தமிழக அணியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்கா கழனிவாசலில் வசிக்கும், குமார் சங்கீதா தம்பதியரின் மகள் ஜனரஞ்சனி பங்கேற்று விளையாடி தமிழக கபாடி அணிக்கும், பேராவூரணி பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11-ம் வகுப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனரஞ்சனின் இந்த சாதனையை பேராவூரணி பகுதி வாழ் மக்கள் பெருமளவில் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.