பேராவூரணி தாலுக்கா, சொர்ணக்காடு கிராமத்தில் ஊர்காவலன் நண்பர்கள் நடத்திய பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்க்கு, அஇஅதிமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். சொர்ணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். அஇஅதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கேஎஸ்.அருணாச்சலம் ஆகியோர் விளையாட்டு விழாவினை துவக்கி வைத்தனர். நிகழ்வில், பெரிய மாடு கைப்புறா, சிறிய மாடு கைப்புறா, சைக்கிள் ரேஸ், மாரத்தான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில், அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா, ஒன்றியப் பொருளாளர் சிஎம்.சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஆர்கே.சிவா, மாவடுகுறிச்சி எஸ்ஏ.காந்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரத் துணைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கிளைச் செயலாளர் ஏவிஎம்.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சொர்ணக்காடு ஊர்க்காவலன் நண்பர்கள் செய்திருந்தனர்.