பேராவூரணியை சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 2000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க சாசன தலைவர் பன்னீர்செல்வம், சாசன நிர்வாக அலுவலர் இராமநாதன், சாசன உறுப்பினர்கள் கபிலன், சிலம்பரசன் ஆகியோர் களத்தூர் உயர்நிலைப்பள்ளி,
களத்தூர் தொடக்கப்பள்ளி,
சித்துக்காடு உயர்நிலைப்பள்ளி,
செருவாவிடுதி உயர்நிலைப்பள்ளி,
செருவாவிடுதி வடக்கு தொடக்கப்பள்ளி, செருவாவிடுதி உடையார் தெரு தொடக்கப்பபள்ளி,
ஈச்சன்விடுதி தொடக்கப்பள்ளி, ஆவணம் தொடக்கப்பள்ளி,
ஆவணம் முகமதியர் தெரு தொடக்கப்பள்ளி, துலுக்கவிடுதி நடுநிலைப்பள்ளி,
ஏனாதிகரம்பை உயர்நிலைப்பள்ளி,
செங்கமங்கலம் உயர்நிலைப்பள்ளி,
செங்கமங்கலம் தொடக்கப்பள்ளி,
ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.