பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் ஞாயிறுதோறும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 74 ஆவது வாரமாக, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமையில், லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் இன்று சுமார் 200 நபர்களுக்கு உணவு வழங்கினார்கள். பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் இந்த தொடர் சேவை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது..