பேராவூரணி II, கருப்பமனை கிராமத்தைச் சார்ந்த அருள் மோகன்ராஜ் என்பவரது வீடு, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் ஊறி, சுவர் இடிந்து விழுந்த நிலையில், மேல் கூரைகள் ஏதும் இன்றி, தார்ப்பாயை கட்டி அதில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் மீதமிருந்த சுவர்களும் இடிந்து விழுந்ததாக கூறும் அருள் மோகன்ராஜ், அரசு தகுந்த நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.