பேராவூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்

IT TEAM
0

 


பேராவூரணி ரோட்டரி சங்கம், கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பேராவூரணி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் ஆ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொருளாளர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக மண்டலம் 8 - உதவி ஆளுநர் சிவ.பா.சிவச்சந்திரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். நிகழ்வில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஹம்னா தலைமையிலான குழுவினர் முகாமினை ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்வில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முருகவளவன், ரமேஷ், கௌதமன், முருகானந்தம், சிவ.சதீஷ்குமார், ஆனந்தன், அபிராமி சுப்பிரமணியன், நீலகண்டன், நாகராஜன், மருத்துவர் முத்துக்குமார், மருத்துவர் பிரகாசம், மற்றும் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் 152 நபர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர். 37 நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top