பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய பெண் மரணம் காவல்துறை விசாரணை

IT TEAM
0




தஞ்சாவூர், ஏப்.21 - 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது45), டிரைவர். இவரது மனைவி கற்பகசுந்தரி (வயது 32), இவர் ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் நிஷாந்தி (வயது 13), ஐந்தாம் வகுப்பு) படிக்கும் ரேஸ்னி (வயது 10) என்ற இரு மகள்கள் உள்ளனர்.


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30 மணி அளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, கற்பகசுந்தரி மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கற்பகசுந்தரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து கற்பகசுந்தரியின் தந்தை செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 


இந்நிலையில், திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில், கற்பகசுந்தரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கற்பகசுந்தரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குடிபோதையில் கணவர் அடித்துக் கொன்றிருக்கலாம் எனக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 


தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக செய்தனர். 


இதற்கிடையே கற்பகசுந்தரியின் உடல் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு மாலை 7 மணிக்கு ஒட்டங்காடு கொண்டு வரப்பட்டு, தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் ராமமூர்த்தியை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. உடற்கூறாய்வு

அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா எனத்தெரிய வரும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top