தஞ்சாவூர், ஏப்.22 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை-உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் 29-ஆவது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளித்தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் குத்துவிளக்கேற்றினார்.
சிறப்பு விருந்தினராக, விஜய் தொலைக்காட்சி, பாக்கியலட்சுமி தொடர் நடிகை சுசித்ரா கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர் வ.ஜெய்சங்கர், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் செந்தலைப்பட்டினம் அப்துல் வஹாப், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மந்திரிப்பட்டினம் என்.சேக் தாவூத், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என். குலாம் கனி, ஏ.ராஜமாணிக்கம், மல்லிகா அப்துல் ஜபார், புலவர் அரங்கசாமி, பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் வீரியங்கோட்டை எம்.நீலகண்டன், மதிமுக மாவட்ட துணைத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் முகமது அலி, உடையநாடு நைனாமுகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார், சிறப்பு விருந்தினர் நடிகை சுசித்ரா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பள்ளி முதல்வர் பாலமுருகன், ஆசிரியர்கள்
நிர்மலா, நித்யா, அகல்யா, திவ்யா, ரெஜினா, தேவிபாலா, சீனிவாசன், பாலமுருகன், தங்கபாண்டியன், ஹரிணி, அருள்செல்வி, கோமதி, சத்யா, பள்ளி நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.