பேராவூரணி அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களுக்கு பாம்பன் விரைவு ரயில் நிறுத்தம் கேட்டு மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு

IT TEAM
0

 


பேராவூரணி அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களுக்கு பாம்பன் விரைவு ரயில் நிறுத்தம் கேட்டு மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு


புதுடில்லி ரயில்வே பவனில்,மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களை தமிழக பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் சந்தித்து, பாம்பன் விரைவு ரயில் நிறுத்தும் கேட்டும், மயிலாடுதுறை -காரைக்குடிக்கு,ஓர் விரைவு ரயில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக, கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களுடன் அவர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தஞ்சை வரதராஜன், ஜெய் சதீஷ், பேராவூரணி ரயில்வே பயணிகள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் சொ. மெய்ஞானம்,அதிராம்பட்டிணம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் தஅப்துல் ரஜாக்,தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் ரேவந்த் குமார்,உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சரத் ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பின்போது, பேராவூரணி அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களுக்கு பாம்பன் விரைவு ரயில் நிறுத்தும் கேட்டும், மயிலாடுதுறை -காரைக்குடிக்கு,ஓர் விரைவு ரயில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக, கோரிக்கை வைத்ததற்கு, மேற்கண்ட கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக ,ராமேஸ்வரம் -பேராவூரணி -பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் வழியாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு பின்பு தொடங்கப்பட்டு, பேராவூரணி,அதிராம்பட்டினம்,முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தத,ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் பாதிப்படைந்ததாக விரிவாக எடுத்துரைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top