பேராவூரணி, செப்.13-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள உதயசூரியபுரம் கடை வீதியில், செப்.17 இல், கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சனிக்கிழமை காலை தஞ்சை தெற்கு மாவட்டம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர்
எஸ்.ஆர்.சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல் தலைமை வகித்தார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, இப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 30 பேருக்கு சீருடைகள், குடை, இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
முகிலன், வீரமணி, அரவிந்த்
முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் அ.மூர்த்தி, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர. சரவணன், இளைஞர் அணி நம்பிவயல் எஸ். உதயணன் சௌந்தர்ராஜன், முத்தமிழ், வாட்டாத்திக்கோட்டை பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.