பேராவூரணி, செப் 23
பேராவூரணி அருகே வீரக்குடி துணை மின் நிலையம் சுற்றுப் பகுதிகளில் இன்று செப்டம்பர் 23ம் தேதி செவ்வாய்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செப்டம்பர் 23ம் தேதி செவ்வாய்கிழமை வீரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொர்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூர், செல்லபிள்ளையார்கோவில், திருவதேவன், அடைக்கத்தேவன், குப்பதேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.