பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற சனிக்கிழமை, 20-09-2025 அன்று, சேதுபாவாசத்திரம் 110/33 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டும் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக் கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலசேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டானிக்கோட்டை ஆதனூர், ஆத்தாலூர், பேராவூரணி, சேதுரோடு, அண்ணா நகர், முனீஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்" என தெரிவித்துள்ளார்