பேராவூரணி பேரூராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி மாமன்ற கூட்டத்தில், "நகரின் மைய பகுதியான தனது வார்டில், சாலையில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையின் நடுவே மற்றும் குறுக்கே சுற்றி திரியும் மாடுகளை உரிய அறிவிப்பு செய்து அப்புறப்படுத்தவும், அதனைத் தொடர்ந்தும் மாடுகள் தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகளை கோசாலைக்கு அனுப்பி, மக்களின் இடர்பாடு போக்கிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். மேலும் "சாலையில் திரியும் நாய்களுக்கு உரிய தடுப்பூசி செலுத்தி, ரேபிஸ் நோய் பரவலிருந்து தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.
