தஞ்சாவூர், ஜன.7 - பேராவூரணி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எம்எல்ஏ நா.அசோக்குமார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ருத்ரசிந்தாமணி ஊராட்சி, பழுக்காடு கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளிகளான காளியப்பன்- சரோஜா தம்பதிகள் வசித்து வந்த கூரை வீடு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் புதன் கிழமை அன்று காலை நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரொக்கப் பணம் நிதி உதவி வழங்கினார். அப்போது சேதுபாவாசத்திரம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் குழ.செ.அருள்நம்பி, கிளைச் செயலாளர் குழ.சின்ன முத்து மற்றும் நிர்வாகிகள் நடராஜன், ராமகிருஷ்ணன், மதியழகன், தர்மராஜ், பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
