தஞ்சாவூர், ஜன.7 -
கால்நடை பராமரிப்புத்துறை, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டம் சார்பில், பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி 8ஆவது சுற்று செலுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத்துறை பட்டுக்கோட்டை கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் இ.விஜயராகவன் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் வீரமணி, சண்முகநாதன், பிரகாஷ் மற்றும் கால்நடைத்துறையினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை பட்டுக்கோட்டை கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் இ.விஜயராகவன் கூறுகையில், "பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில், 20 ஆயிரத்து 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் 4 மாதத்திற்கு மேற்பட்ட பசு, எருமைக் கன்றுகள் முதல் அனைத்து மாடுகளுக்கும் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கடந்த டிசம்பர் 29 முதல் ஜன.18 வரை கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு" கேட்டுக் கொண்டுள்ளார்.
