பொன்னாங்கண்ணிக்காடு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் நற்பணி மன்றம் நடத்தும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கைபந்தயம்

IT TEAM
0


பேராவூரணி, பொன்னாங்கண்ணிக்காடு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் நற்பணி மன்றம் நடத்தும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் வரும் 07.02.2026 சனிக்கிழமை பேராவூரணி உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற இருக்கிறது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகிக்க, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார். நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நிகழ்வில் பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மற்றும் நடுக் குதிரை ஆகிய போட்டிகள் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தனவேந்தன் மற்றும் புவனேஸ்வரன் குழுவினர் செய்து வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top