பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா, கல்லூரி முதல்வர் முனைவர் சி. இராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியின் முன்னாள் மாணவி ரா.பிரமிளா தேவி, தட்டச்சர், வணிகவரிதுறை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கு தங்களை செய்வது எப்படி என்பதை பற்றி பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத் தலைவர் நா.பழனிவேலு மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் ரா.அருண்மொழி, உதவிப்பேராசிரியர் ப.ஜெயகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கௌரவ விரிவுரையாளர்கள் சோ.ஜமுனா வரவேற்புரையும், சு.நித்யசேகர் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையும், அ.ராஜேஷ் நன்றி கூறினார்
