பேராவூரணியில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

IT TEAM
0

 


தஞ்சாவூர், ஜன.28 - 

தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து உண்மையான காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். 


கம்யூடேஷன் பிடித்த காலத்தை 11 ஆண்டுகளாக குறைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் கே.ஏ.தங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கணே.மாரிமுத்து, வட்ட துணைத்தலைவர் கலா நமச்சிவாயம், வட்ட துணைச் செயலாளர் அ.கா.தங்கராசு முன்னிலை வகித்தனர். வட்ட துணைத்தலைவர் பி.கணேசன் வரவேற்றார்.


வட்டச் செயலாளர் த.கண்ணப்பன் துவக்கவுரையாற்றினார். தோழமை சங்க நிர்வாகிகள் டி.ஜெயதுரை, வீ.அ.குழந்தைவேல், நா.பாலசுப்பிரமணியன், க.கணேசன், மாலதி மகேந்திரன், நூலகர் வெங்கட்ரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பட்டுக்கோட்டை வட்ட துணைத்தலைவர் சிவ.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். வட்டப் பொருளாளர் கே.கருப்பையா நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top