பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்திடவும், பள்ளியின் தரத்தை உயர்த்திடவும் வேண்டும் என்கிற நோக்கத்தோடு பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் இணைந்து ஒருங்கிணைப்பு குழு உருவாக்கி, அதன்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். அதில் பள்ளியின் வளர்ச்சியை உயர்த்திட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக, வரும் 29 1 2026 வியாழக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு முன்னாள் மாணவர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் ஆர்.பி.ராஜேந்திரன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முதல்வன், மனோகரன் மற்றும் பன்னீர்செல்வம், சிறப்பு அழைப்பாளர்கள் நல்லாசிரியர் ஜோதிமணி, சிவ. ரவிச்சந்திரன், பள்ளியின் எஸ்எம்சி தலைவி, கவுன்சிலர்கள் முருகேசன், பழனிவேல் சங்கரன், வர்த்தக கழக ஜி.மணிகண்டன், சமூக செயற்பாட்டாளர்கள் செழியன், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திருவேங்கடம், ஆசிரியர் செல்வகுமார், சிவக்குமார், ராஜரெத்தினம், சிவ.சதீஷ்குமார், மருத.உதயகுமார், சாதிக் அலி, துளிர் அறக்கட்டளை நாகேந்திர குமார், பத்திரிக்கையாளர்கள் ராஜா, வேத.கரம்சந்த் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
